கொலுசு, மெட்டி, ஒட்டியாணம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் தான் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப்படும்போது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்களுக்கு சில நாட்களில் மாதவிடாய் சிக்கல் சரியாகும்.

செயின், நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகிறது.

மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. செக்ஸுவல் ஹார்மோன்களைத் தூண்டும். ‘பில்லாலி’ என்பது குழந்தை பிறந்தவுடன் 3-வது விரலில் அணிவது. இதனால் சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பு அதிகரிக்கும்.

மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. ப்ரேசிலட், வாட்ச் அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

தோடு : மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும்.

நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி, சைனஸ் பிரச்சனை சரியாகிறது.

வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும்போது இடுப்புப் பகுதி நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்றுப் பகுதிகள் வலுவடைகிறது.

Read More : Jio பயனர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! ஏப்ரல் 25ஆம் தேதி ஆப்பு வைக்கும் அம்பானி..!!

Chella

Next Post

மோடி vs நேரு குடும்பம் - கடும் வார்த்தை யுத்தம்..! 2ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது..!

Thu Apr 25 , 2024
கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு நாளை (ஏப்ரல் 26) 2ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.கேரளா, […]

You May Like