வாகனம் வாங்கப் போறீங்களா..? 10 வருட வாரண்டி..!! ஹோண்டா நிறுவனத்தின் புதிய திட்டம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி பிளஸ் (Extended Warranty Plus- EW Plus) எனப்படும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


EW Plus திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கிய 91 நாட்கள் முதல் 9 ஆண்டுகள் வரை எக்ஸ்டெண்டெட் வாரண்ட்டி ஆப்ஷனை தேர்வு செய்வதற்கான அனுமதியை தருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 10 வருட காம்ப்ரிஹென்சி வாரண்ட்டி கவரேஜ் தருவது மட்டுமின்றி, பல ரினியூவல் ஆப்ஷன்களையும் வழங்குகிறது. இத்திட்டத்தைத் தேர்வு செய்துவிட்டால், வாகனத்தின் உரிமையாளர் மாறினாலும் கூட அதன் பலன்கள் புதிய உரிமையாளர்களுக்கு கிடைக்கும்.

EW Plus திட்டம் இன்ஜின் பாகங்கள் மற்றும் பிற மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் பாகங்களுக்கு காம்ப்ரிஹென்சி கவரேஜ் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் கொண்ட வாடிக்கையாளர்கள் 3 வெவ்வேறு விதமான ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். அவை 7 வருடம் பழைய வாகனங்களுக்கு 3 வருட பாலிசி, 8 வருட பழைய வாகனத்திற்கு 2 வருட பாலிசி மற்றும் 9 வருட பழமையான வாகனத்திற்கு ஒரு வருட பாலிசியை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1,20,000 கிலோமீட்டர்கள் பயணித்த ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் 1,30,000 கிலோ மீட்டர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கு இந்த ஆப்ஷன் மூலமாக கவரேஜ் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்திற்கான ஆரம்ப விலை 150 cc வரையிலான மாடல்களுக்கு ரூ.1317. 150 cc முதல் 250 cc வரையிலான மாடல்களுக்கான ஆரம்ப விலை ரூ.1667 எனினும் வாகனத்தை வாங்கிய தேதியைப் பொறுத்து இந்த விலை மாறுபடலாம்.

EW Plus திட்டத்தின் அம்சங்கள் : வாகனம் வாங்கிய தேதியிலிருந்து 91 நாட்கள் முதல் 9 வருடம் வரை வழங்கப்படும். கிடைக்கக்கூடிய பாலிசி ஆப்ஷன்கள் – ஏழு வருடம் பழைய வாகனங்களுக்கு மூன்று வருட பாலிசி, 8 வருட பழைய வாகனத்திற்கு இரண்டு வருட பாலிசி மற்றும் 9 வருட பழமையான வாகனத்திற்கு ஒரு வருட பாலிசி. எந்த வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் – தற்போதுள்ள EW மற்றும் EW அல்லாத வாடிக்கையாளர்கள்.

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் : கஸ்டமர் ரிட்டன்ஷன் டூல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளிக்கிறது. உற்பத்தி காரணமாக ஏற்பட்ட டேமேஜ்கள் அனைத்தும் இந்த கவரேஜில் அடங்கும். 10 வருடம் வரையிலான வாரண்டி கவரேஜ் வழக்கமான வாக பராமரிப்பு, அதிக ரீசேல் வேல்யூ. வாகனத்தை வாங்கிய நாளிலிருந்து ஒன்பது வருடம் வரை கிடைக்கும் ரின்யூவல் ஆப்ஷன். இந்தியா முழுவதும் இந்த திட்டம் பயன்படுத்தப்படலாம். பாலிசியை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் வசதி.

CHELLA

Next Post

ஜூலை 1ஆம் தேதி முதல் காரின் விலை அதிரடியாக உயருகிறது..!! அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Wed Jun 21 , 2023
பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை […]
Cars 1

You May Like