மனித வாழ்வில் ஏற்படும் துயரங்கள், தோல்விகள், தடைகள் ஆகியவற்றுக்கு ஒரு காரணத்தைத் தேடும் மனநிலையே பல ஆன்மீக நம்பிக்கைகளுக்குத் தளமாக அமைந்துள்ளது. சாஸ்திரங்களில் கூறப்படும் 13 வகை சாபங்களில், இன்றளவும் மக்களிடையே அதிகமாக பேசப்படுவதும், அச்சம் கலந்த நம்பிக்கையாக நிலைத்திருப்பதும் “பெண் சாபம்”.
வீட்டில் உள்ள இளம் வயது பிள்ளைகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பல விதமான பிரச்சனைகள், பல காலமாக திருமணம் ஆகாமல் இருப்பது, விடாமல் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருந்தால் அந்த குடும்பத்தில் பெண் சாபம் உள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, சந்திரன் 6, 8, 12 போன்ற இடங்களில் அமைந்தால் பெண் சாபத்தின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ச்சியான தடைகள், அவமானங்கள், முன்னேற்றக் குறைவு, குடும்ப வளர்ச்சியில் இடையூறு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், இந்த தாக்கம் ஒருவரை மட்டுமல்லாது அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என்ற கருத்து, இந்த நம்பிக்கையை இன்னும் ஆழமாக மக்களின் மனதில் பதிய வைத்துள்ளது.
இதிலிருந்து விடுபட நீங்கள் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் அத்திக்கோட்டை என்னும் ஊரில் உள்ள சப்த கன்னி கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். இதனால் பெண் சாபம் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. மேலும் ஏழு வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் பெண்களுடைய சாபம் நீங்குவதாக ஐதீகம் உண்டு.
மேலும் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள சப்த கன்னிகளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சப்த கன்னிமார்களுக்கு பாவாடை வாங்கி கொடுத்து அதனை சாற்றி உங்களுடைய பெண் சாபம் தீர மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தாலும் ஸ்திரீ சாபங்கள் நீங்குவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.
Read more: கேது சஞ்சாரம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு..! உங்க ராசி இருக்கா..?



