இளநரை, கொத்து கொத்தா முடி உதிர்கிறதா?. 100% கலப்படமே இல்லாத ஹோம் மேட் ஷாம்பு!. உடனே டிரை பண்ணுங்க!

natural homemade shampoo 11zon

முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம்.


முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பொருள்களை சேர்த்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும் என்று அழகுகலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்திய சிகைக்காய், பூந்திக்கொட்டை, செம்பருத்தி, ஆவாரம் பூ, செம்பருத்தி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை இப்படி பல இயற்கை பொருள்கள் கூந்தலுக்கு அதி அற்புத நன்மைகளை செய்யும். இவை கூந்தலில் பொடுகு, பேன், அரிப்பு தொல்லை நீக்கி கூந்தலை ஆரோக்கியமான திசையில் அழைத்து செல்லும். இதனால் கூந்தல் பிரச்சனை, முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்றவை இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இடித்த பூந்திக்கொட்டை 4, நெல்லிமுள்ளி என்று சொல்லப்படும் காய்ந்த நெல்லிக்காய் – 10, சீயக்காய் – 8 துண்டுகள், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு இது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகமாகவே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதாவது இரண்டு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு இரவு முழுவதும் இதை ஊறவிட்டு விடுங்கள்.

மறுநாள் காலை இந்த கிண்ணத்தை அப்படியே அடுப்பில் வைத்து, தண்ணீரில் ஊறியிருக்கும் பொருட்களை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரிலேயே வேகட்டும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு அப்படியே இந்த தண்ணீரை ஆறவிடுங்கள். நாம் சேர்த்திருக்க கூடிய பொருட்களின் அனைத்து சத்தும் அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். இப்போது இதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி நன்றாக புழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

நேச்சுரல் ஷாம்பு தயார். இதை தான் தலைக்கு அப்ளை செய்து குளிக்கப் போகின்றோம். தேவையான அளவு ஷாம்புவை எடுத்து தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். மீதும் இருக்கும் ஷாம்புவை ஐஸ் ட்ரேவில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்தால் ஐஸ் கட்டிகளாக மாறிவிடும். அந்த ஐஸ் க்யூபுகளை ஒரு கண்டெய்னரில் போட்டு மீண்டும் ப்ரீசரில் ஸ்டோர் செய்தால், தேவைப்படும் போது எடுத்து கிண்ணத்தில் போட்டு, ஐஸ் கட்டிகளை உருகவிட்டு மீண்டும் தலைக்கு குளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கையான பொருட்களில் கிடைத்த ஷாம்பு இது. இந்த ஷாம்பூவை தலைக்கு போட்டு குளித்தால் தலையில் சீயக்காய் தூள் ஒட்டிக் கொள்ளும் என்ற கவலை கூட இருக்காது. ஈசியாக தலைக்கு குளிக்கலாம். அதே சமயம் பக்க விளைவுகள் இருக்காது. முடி நன்றாக வளரும். முடி கொட்டுவது நிற்கும். குறிப்பாக இளநரையை தடுப்பதற்கு இதில் ட்ரை ஆம்லா என்று சொல்லப்படும் நெல்லிமுள்ளிகளை சேர்த்து இருக்கின்றோம். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான முடி நிரந்தரமாக இருக்கும்.

Readmore: குலதெய்வ வழிபாட்டை மட்டும் ஏன் புறக்கணிக்கக் கூடாது தெரியுமா..? இதை படித்தால் இனியும் போகாம இருக்க மாட்டீங்க..!!

KOKILA

Next Post

முக்கிய உத்தரவு..! தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை கட்டாயம்...!

Fri Aug 29 , 2025
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் […]
Teachers School 2025

You May Like