பல மாதங்களாக ஒரே டூத் பிரஷ் பயன்படுத்துகிறீர்களா?… கண்ணுக்கு தெரியாத ஆபத்து!… பின்விளைவுகள் அதிகம்!

தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. பழைய பிரெஷ்ஷால் உங்கள் பற்களில் படிந்துள்ள பிளேக்கை அகற்ற முடியாது. உங்கள் டூத் பிரெஷ் எவ்வளவுக்கு எவ்வளவு தேய்மானம் அடைகிறதோ அந்த அளவிற்கு அது பிளேக்கை அகற்றுவதில் திறமையற்றதாக மாறும். உங்கள் பழைய பிரெஷ்ஷால் பிளேக்கை சுத்தம் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், உங்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும்.

எனவே, மருத்துவர்களின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ் மாற்றப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல், வீட்டில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால் அனைவரும் டூத் பிரஷ்ஷை மாற்றுவது நல்லது. மேலும் உங்கள் பிரஷை யாராவது தவறுதலாக பயன்படுத்தினாலும் கட்டாயம் மாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

1newsnationuser3

Next Post

ரேஷன் அரிசி தொடர்பாக புகார் செய்ய வேண்டுமா...? உடனே இந்த இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க...!

Wed Apr 26 , 2023
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ […]
ration

You May Like