சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா….?

சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்ததன் மூலமாக தமிழக மக்களிடையே வெகுவாக பிரபலமானார். அதன் பிறகு இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இன்றளவும் மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதற்கு காரணம் தென்றல் தொடர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அந்த அளவிற்கு அந்த தொடரில் கதாபாத்திரத்துடன் ஒன்றி போய் இருப்பார் தீபக். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும், சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 2008 ஆம் வருடம் சிவரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அக்னித் என்ற மகன் இருக்கிறார். இத்தகைய நிலையில், தீபக் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

Next Post

ஆக்ரோஷமாக மாறிய வெற்றிமாறன்..!! ’விடுதலை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Mon Mar 27 , 2023
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இதில், சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், […]

You May Like