மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது.
சர்வதேச விளையாட்டுகளில் பதக்கம் வென்ற வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் அளிக்கப்படுகிறது. நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்காக செயல்படும் பெரு நிறுவனம் (பொது மற்றும் தனியார்), அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு விருது வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்த விவரங்களை www.yas.nic.in என்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்.
விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வரவேற்கிறது. 2025-ம் ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிக்கை www.yas.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான பிரத்யேக தளத்தின் மூலம் ஆன் லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். www.dbtyas-sports.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 2025 அக்டோபர் 28 (செவ்வாய்கிழமை) ஆகும்.