கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தீ வைப்பு.. கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்..! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்..

Christmas Stalin 1

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள், இயேசு பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில கும்பல் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் – மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் – ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளி விவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டு மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.

Read more: 3,196 ஆர்டர் செய்த ஒரே நபர்.. 93 மில்லியன் பிரியாணிகள்: 2025-ல் இந்தியா எப்படி Swiggy மூலம் ஆர்டர் செய்தது? வியக்க வைக்கும் ரிப்போர்ட்!

English Summary

Arson at Christmas celebration.. Riot gangs should be suppressed with an iron fist..! Chief Minister Stalin’s obsession..

Next Post

உலகின் மிகவும் விஷம் நிறைந்த பறவை..! அதைத் தொட்டால் மரணம் உறுதி..!

Thu Dec 25 , 2025
நாம் பறவைகளைப் பற்றி நினைக்கும்போது, ​​அழகான மற்றும் வண்ணமயமான பறவைகளைப் பற்றி நினைக்கிறோம். சிறிய இறகுகளுடன் மிகவும் அழகாக இருக்கும் அந்தப் பறவைகள், தங்கள் கீச்சொலிகளால் நம்மை மகிழ்விக்கின்றன. அவை மரங்களில் பறக்கும்போது சத்தமிடுகின்றன. அவை எங்கு இருந்தாலும், அங்கே எப்போதும் ஒரு சத்தமான சூழல் நிலவுகிறது. காலையில், அவை பலவிதங்களில் கத்தி, ஒரு புதிய உற்சாகத்தைக் கொண்டு வருகின்றன. இருப்பினும், நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பறவைகளும் நமக்கு நல்லவை […]
hooded pitohui bird

You May Like