சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனால் கடுப்பான நடிகர் அசோக் செல்வன்!

5 படங்கள் தோல்வி கண்டுவிட்டதாக தன்னை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நடிகர் அசோக் செல்வன், குரைக்கும் நாய் குரைக்கட்டும் என பதில் விமர்சனம் செய்திருப்பது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம் மற்றும் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் என யூ-டியூப் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் டுவிட் போட்டிருந்தார். மேலும், சசிகுமார் நடித்த 3 படங்கள் மற்றும் அதர்வா நடித்த 3 படங்களும் இந்த ஆண்டு தோல்வியை அடைந்ததாக ட்வீட் போட்டிருந்தார்.

Ashok selvan


குரைக்கிற நாய் குரைக்கட்டும் – அசோக் செல்வன்
சசிகுமார் மற்றும் அதர்வா ப்ளூ சட்டை மாறனின் இந்த டுவிட்டை கண்டு கொள்ளவில்லை. ஆனால், நடிகர் அசோக் செல்வன் சட்டென சூடாகி விட்டார் போல. ப்ளூ சட்டை மாறனை குறிப்பிடாமல், “குரைக்கிற நாய் குரைக்கட்டும்.. அதை இக்னோர் செய்து விட்டு நாம் நம் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்” என அசோக் செல்வன் பதிலடி கொடுத்திருந்தார்.

Blue sattai maran new


என்ஜாய் தி பிஸ்கட் – ப்ளூ சட்டை மாறன்

வருஷத்துக்கு 5 படம் ஃபிளாப் என்பது சரியான வளர்ச்சி இல்லை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. டுவிட் மூலம் குரைப்பது நல்லது கிடையாது குழந்தை.. என்ஜாய் தி பிஸ்கட் என காரசாரமாக ப்ளூ சட்டை மாறன் தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனுக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே வெடித்துள்ள இந்த திடீர் கருத்து மோதலுக்கு ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

KOKILA

Next Post

வடிவேலு பாணியில் 40 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் 100வது திருட்டில் காவல்துறையினரிடம் சிக்கினார்! எப்படி தெரியுமா?

Sun Dec 18 , 2022
அரசியல்வாதிகள் ஏதாவது சாதனை படைத்தால் அதனை பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாடுவார்கள். அல்லது யாராவது ஒருவர் 100 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு ஒரு விழாவை எடுத்து அவருடைய வாரிசுகள் கொண்டாடுவார்கள். ஆனால் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடுவதற்காக செல்லும் போது அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளிகள் அவர் 100வது திருட்டை செய்யப் போவதாக போஸ்டர் அடித்து திருவெங்கிலும் ஒட்டி அமர்க்களம் படுத்தியிருப்பார்கள்.அப்படி ஒரு சம்பவம் கோவையில் […]

You May Like