ஆசியக் கோப்பை 2025!. பரபரப்பான வெற்றி!. ஆப்கானிஸ்தானை சூப்பர் 4-க்குள் நுழைவதை தடுத்த வங்கதேசம்!.

Afghanistan Bangladesh

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த (செப்டம்பர் 9) தொடங்கி வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கிரிக்கெட் தொடர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் உள்ளன.

அதேப்போல லீக் சுற்று, சூப்பர் ஃபோர் சுற்று மற்றும் இறுதி சுற்று என 3 கட்டங்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிச் சுற்று போட்டிக்குத் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 9 ஆவது லீக் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் விளையாடி அரை சதம் கடந்தார். அதாவது 31 பந்தில் 52 ரன்களை தன்ஜித் ஹசன் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதேப்போல் தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். முடிவில் வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.

இதில் ரிஷாத் ஹொசைன் (2/18), நசும் அகமது (2/11) மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் (3/28) ஆகியோர் வங்கதேசம் அணிக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தினர். ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அஸ்மதுல்லா உமர்சாய் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்த டான்சிட் மற்றும் சைஃப் ஹாசன் (28 பந்துகளில் 30) ​​இரட்டை விரைவான நேரத்தில் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து அடித்தளம் அமைத்தனர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

 அடுத்த லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை, இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வென்றுவிட்டால், மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அதிக நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதனால், வரும், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலாக லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Readmore: பிரதமர் மோடி பிறந்தநாள்!. அதிபர் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து!. இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி!

KOKILA

Next Post

விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்... பிரதமர் மோடிக்கு பறந்த கடிதம்...!

Wed Sep 17 , 2025
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய […]
mk Stalin 2025 4

You May Like