ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி!… தமிழக வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை!

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்திய பவானிதேவி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்த நிலையில், வெண்கலம் பதக்கம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார். இந்த ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி, சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தனி ஒருவனால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து அணி!... கவாஜாவை வீழ்த்த வித்தியாசமான ஃபீல்டிங்கை அமைத்த ஸ்டோக்ஸ்!... வைரல் வீடியோ!

Tue Jun 20 , 2023
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்த, வித்தியாசமான ஃபீல்டிங்கை அமைத்த பென் ஸ்டோக்ஸின் ‘ப்ரம்பெல்லா’ வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் பெரிதாக பேசப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் கடந்த ஜூன் 16 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரை போல் கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில், முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு […]

You May Like