ஆசிய விளையாட்டுப் போட்டிகள்; கடும் அதிருப்தி; ஜப்பான் செல்ல தயங்கும் இந்திய அணி!. என்ன காரணம்?

japan asian games 30kb

அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான தங்குமிட வசதிகள் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அங்கு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு இந்திய ‘பி’ அணியை அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் தொடங்குகின்றன. இதில் ஆடவர் கிரிக்கெட் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும், மகளிர் கிரிக்கெட் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும் நடைபெற உள்ளன. அங்குள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய பிசிசிஐ ஒரு பார்வையாளரை ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை அணியை அனுப்புவதா அல்லது மாற்று அணியை அனுப்புவதா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

வீரர்களுக்கான ஓய்வறைகள் முறையான கட்டிடங்களில் இல்லாமல் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகள் அந்தக் கூடாரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளன. வீரர்கள் தங்கும் விடுதி அறைகளும் மிகச் சிறியதாக உள்ளன. இந்தக் குறைகளை ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தொடருக்காக இந்தியா ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஒரு வலுவான ஆடவர் அணியையும், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் முன்னணி வீராங்கனைகள் அடங்கிய மகளிர் அணியையும் அறிவித்திருந்தது. ஆடவர் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களுடன், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பிடித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்ட ஆடவர் டி20 அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ரா.

அறிவிக்கப்பட்ட மகளிர் டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஜி.கமலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி சர்மா.

1newsnationuser5

Next Post

பேட்டரி சார்ஜ் சீக்கிரம் காலியாகுதா? உங்கள் போனில் இந்த விஷயங்களை ஒருமுறை செக் பண்ணுங்க!

Sat Aug 29 , 2026
ஸ்மார்ட்போன் வாங்கி சில காலம் ஆன பிறகு, முன்பைவிட பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதை பலரும் கவனிப்பார்கள். இதற்கு பேட்டரி திறன் குறைந்திருப்பது மட்டும் காரணமாக இருக்காது. போனை நாம் பயன்படுத்தும் விதம், செயலிகளுக்கு வழங்கியுள்ள அனுமதிகள் மற்றும் சில அம்சங்கள் தொடர்ந்து இயங்குவது ஆகியவையும் சார்ஜ் விரைவில் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, நாள் முழுவதும் அதிக நேரம் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது, கேமிங் செய்வது […]
smart phone charger white

You May Like