ஆசிய விளையாட்டு!. ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீராங்கனை!. பர்வீன் வரலாற்று சாதனை!

Parveen gold 30kb

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


மகளிர்க்கான குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை சென் நியென்-சின் (Chen Nien-chin) என்பவரை வீழ்த்தி பர்வீன் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். எதிராளியின் அனுபவத்திற்கு சற்றும் சளைக்காமல் களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வீன், அபாரமான தாக்குதல்கள் மூலம் வெற்றி வாய்ப்பைத் தன்வசப்படுத்தினார்.

இந்தத் தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத பர்வீன், மிகவும் நம்பிக்கையுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ‘வாக் ஓவர்’ பெற்ற அவர், காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் நவ்பாகோர் காமிடோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் லி ஷூவை 5-0 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக வீழ்த்தித் தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை உறுதி செய்திருந்தார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், ‘ஸ்பிலிட் டெசிஷன்’ (split decision) எனப்படும் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் 3-2 என்ற கணக்கில் பர்வீன் வெற்றி பெற்றார். அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி தொடக்கத்தில் இரு வீராங்கனைகளும் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், முதல் சுற்றில் பர்வீன் அதிரடியான தாக்குதல்களைத் தொடுத்து ‘நேர் ஜாப்’ அடிகளைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். இதனால் ஐந்து நடுவர்களும் முதல் சுற்றின் புள்ளிகளை பர்வீனுக்கே சாதகமாக வழங்கினர்.

இரண்டாவது சுற்றில் சினீஸ் தைபே வீராங்கனை சென் தீவிரமாக மீண்டெழுந்து ‘ஹூக்’ முறையில் புள்ளிகளைச் சேகரித்தார். பர்வீன் அதற்குப் பதில் தாக்குதல் நடத்த முயன்றபோதிலும், நடுவர்கள் இரண்டாவது சுற்றை ஒருமனதாக சென்னுக்கே வழங்கினர். இதனால் போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.

வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது சுற்றில் இரு வீராங்கனைகளும் சரமாரியாகப் புள்ளிகளை எடுக்கப் போராடினர். சென் வீராங்கனை பர்வீனைப் பின்வாங்க வைக்க முயன்றபோதிலும், இந்திய வீராங்கனை மன உறுதியை இழக்காமல் களத்தில் நிலைத்து நின்று திறம்படச் சமாளித்தார். இறுதியாக நடுவர்களின் ‘ஸ்பிளிட் டிசிஷன்’ (Split Decision) தீர்ப்பின் அடிப்படையில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் பர்வீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றயின் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான 13-வது தங்கப் பதக்கத்தை பர்வீன் உறுதி செய்துள்ளார். போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது நாட்டின் பதக்கப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ்..!! தண்ணீர் லாரி மீது மோதியதில் சுக்குநூறாக நொறுங்கிய பயங்கரம்..!!

Fri Oct 2 , 2026
பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கிப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை எட்டையபுரம் பிரதான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அதே […]
Accident 2026

You May Like