ஆசிய விளையாட்டு!. ஒரே நாளில் 6 தங்கம்!. டாப் 5-ல் நுழைந்த இந்தியா!. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மகளிர் ஹாக்கி அணி!

womens hockey gold 30kb

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் 13-வது நாளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்துள்ளனர். ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களைக் குவித்து அசத்திய இந்தியப் படை, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறித் தனது முத்திரையைப் பதித்துள்ளது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் தொடக்கத்தில், மகளிருக்கான ரீகர்வ் வில்வித்தை அணி இறுதிப்போட்டியில் வலுவான தென் கொரியாவை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, குத்துச்சண்டை களத்தில் தாரகைப் வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் (மகளிர் 75 கிலோ பிரிவு) சீனாவின் பாவோ சியியை வீழ்த்தி அடுத்த தங்கத்தைக் கைப்பற்றினார்.

குத்துச்சண்டையில் இந்தியாவின் பதக்க வேட்டை இத்துடன் நிற்கவில்லை. மகளிர் 65 கிலோ பிரிவில் பர்வீன் ஹூடா, சீன தைபே வீராங்கனை செனை வீழ்த்தித் தங்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து ஆடவர் 80 கிலோ இறுதிப்போட்டியில் அங்குஷ் பங்கால், தென் கொரியாவின் கிம் மின்-சோங்கை வீழ்த்தி இந்தியாவுக்கு 14-வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

மல்யுத்தக் களத்திலும் இந்தியாவின் கொடி உயரே பறந்தது. ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சுஜீத் கல்கல், தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் குடியேவை வீழ்த்தி இந்தியாவுக்கு 15-வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

நேற்றைய நாளின் உச்சக்கட்ட சாதனையாக, இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றதோடு, 2028 லாஸ் ஏஞ்சலஸ் (LA28) ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

தற்போது 16 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 76 பதக்கங்களைப் பெற்று இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

சீனா – 162 தங்கம், 81 வெள்ளி, 73 வெண்கலம் என 316 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்திலும், ஜப்பான் – 72 தங்கம், 83 வெள்ளி 85 வெண்கலம் என 240 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், தென் கொரியா – 33 தங்கம், 39 வெள்ளி, 62 வெண்கலம் என 134 பதக்கங்களுடன் 3வது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் – 20 தங்கம், 23 வெள்ளி, 22 வெண்கலம் என 65 பதக்கங்களுடன் 4ம் இடத்திலும் உள்ளன.

1newsnationuser5

Next Post

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதம் பாயும்!. நேட்டோ நாடுகளுக்கு அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

Sat Oct 3 , 2026
ரஷ்யாவின் எல்லை மற்றும் தன்னாட்சிப் பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுக்கப்பட்டால், தங்களின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். குறிப்பாக, பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய ராணுவ மையமான கலினின்கிராட் பகுதியை NATO நாடுகள் தனிமைப்படுத்தவோ அல்லது தாக்குதல் நடத்தவோ முயன்றால், அதற்குப் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று […]
Russia Putin 2026

You May Like