திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை 24*7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின்.. செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடிய விஜய்!

vijay karur

தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் விஜய் பேசி வருகிறார்..


அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. காவல்துறைக்கு நன்றி தெரிவித்த விஜய், அவர்கள் இல்லை எனில் நான் இங்கு வந்திருக்க முடியுமா என்பது எனக்கே தெரியவில்லை.. கரூர் அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஊர்.. கரூர் பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ள நிறைய விஷயம் இருக்கும்.. ஆனால் இந்தியாவிலேயே கரூர் அப்படின்னு சொன்னாலே ஒரே ஒரு ஃபேமஸா இருக்குது.. யார் காரணம் என்று உங்களுக்கு தெரியுமே..

கரூர் மாவட்டத்தில் பேரீச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.. பேரீச்சை மரத்தை விடுங்க.. பேரீச்சை விதையாவது கண்ணில் காட்டினார்களா? துபாய் குறுக்கு சந்தை கதை தான்.. கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள்.. ஆட்சியே முடியப்போகுது.. இப்ப போயி ஒன்றிய அமைச்சர்கிட்ட அமைச்சர் கோரிக்கை வைக்கிறார்.. அய்யா அமைச்சரே இது தான் டக்கா?” என்று விஜய் பேசினார்..

விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே.. சிலர் மயக்கம் அடைந்ததால் அவர்களுக்கு விஜய் தண்ணீர் கொடுத்தார்.. மேலும் அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸுக்கும் வழிவிட சொன்னார்.

இதை தொடர்ந்து பேசிய விஜய் “ மக்கள் பாதிக்காத வண்ணாம் ஏர்போர்ட் கட்டினால் நன்றாக இருக்கும்.. மணல் கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி. கனிமவளத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.. இதுக்கு காரணம் யாரு சி.எம். சார்? தமிழ்நாட்டின் 3-வது பெரிய ஏரி இங்கிருந்த பஞ்சப்பட்டி ஏரி.. ஆனால் பல வருஷமா அதை சீரமைக்காமல் போட்டு வைத்திருக்கின்றனர்.. உங்கள் ஆட்சி அதாவது தவெக வரும் போது பஞ்சப்பட்டி ஏரி சீர் செய்யப்படும்.. கரூருக்கும் காவிரிக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா?

கரூர் வரை வந்துவிட்டு அவரை பற்றி பேசாமல் போனால் நன்றாக இருக்குமா? கரூர் மாவட்டத்தில் மந்திரி மந்திரி என்று ஒருவர் இருக்காரு.. இப்போது அவர் மந்திரி இல்ல.. ஆனாலும் மந்திரி மாதிரி.. பாட்டிலுக்கு 10 ரூபா.. சமீபத்தில் கரூரில் ஒரு விழா நடத்தினார்.. அந்த விழாவில் சிஎம் அவர்கள் மாஜி மந்திரியை உச்சியில் தூக்கி வைத்து பேசினார்.. ஆனால் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அந்த மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் பேசினார் தெரியுமா? திமுக குடும்பத்திற்கு ஊழல் செய்யும் பணத்தை எல்லாம் 24*7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷினாக இருக்கிறார்.. அப்படின்னு நான் சொல்லவில்லை.. ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Breaking : தவெக கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு? நாளை கரூர் விரைகிறார் ஸ்டாலின்..!

Sat Sep 27 , 2025
தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.. விஜய் பேசிக் கொண்டிருந்த போதே […]
tvk dead0001

You May Like