பெண்களே எச்சரிக்கை!… ஹை ஹீல்ஸ் அணிவதால் இந்த உறுப்புகளை பாதிக்கும் அபாயம்!

ஹை ஹீல்ஸ் அணிவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


பொதுவாக தட்டையான செருப்புகள் அணிந்து நடக்கும்போதோ, அல்லது வெறுங்காலில் நாம் சாலையில் நடக்கும்போதோ, நம் உடலின் மொத்த எடையும் நமது முதுகின் உள்ளேயிருக்கும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும். ஒருவர் ஹை ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்பு அணியும்போது குதிகால் உயரமாக இருக்கும். இதனால், நம் உடலானது முன்னோக்கி வளைந்து இருக்கும். இது நாளடைவில் கூன் விழ வழி செய்யும். மேலும் இந்த ஹை ஹீல்ஸ் செருப்பு உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் கூடிய விரைவில் மூட்டு வலி ஏற்பட வழி செய்யும்.

ஹை ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்பு அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கால் வலி உண்டாகும். ஹை ஹீல்ஸ் என்ற குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை இழந்து சுளுக்கு ஏற்படும். ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு குதிகால் செருப்பு அணியும்போது அதைப் பேலன்ஸ் செய்ய உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் போன்றவை ஏற்படலாம். ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம்.

KOKILA

Next Post

ஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த ராயல்ஸ் பரம்பரை!... ரெக்கார்ட்ஸ் லிஸ்ட் இதோ!

Sat May 13 , 2023
கொல்கத்தாவிற்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல் அணி பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய ரெக்கார்ட்ஸ் படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பான இறுதிக்கட்ட போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்பில் வெறிகொண்டு விளையாடிவருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி […]
rajasthan royals

You May Like