ஆண்களே எச்சரிக்கை!… மீல் மேக்கரை இனி சாப்பிடாதீர்கள்!… குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம்!…

மீல் மேக்கரை அதிகமாக எடுத்து கொள்வதால், ஹார்மோன் சமநிலை மாறி ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்படுகிறது.


சோயா பீன்ஸ் சக்கையை வைத்து தயாரிப்பது தான் மீல் மேக்கர். இதில் புரதச்சத்து காணப்படுவதால் பலரும் விரும்பி எடுத்து கொள்கிறனர். இறைச்சிக்கு பதிலாக பிரியாணியில் இதை போட்டு சமைத்து கொடுத்தால் வேண்டாம் என சொல்லாவதவர்களே கிடையாது. இதில் புரதம் அதிகமாக காணப்படுவதால், ருசிக்காக மீல் மேக்கரை அடிக்கடி சமைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். இத்னால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.மீல் மேக்கர் அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலை மாறி ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் ஒவ்வாமைக்கு காரணமாகிவிடும்.

ருசிக்காக மீல் மேக்கர் அடிக்கடி சமைப்பதால் நீங்களே புற்றுநோய் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் இதை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் நிறைய உற்பத்தியாக காரணமாகிவிடும். அதுமட்டுமல்ல.. இதை உண்பதால் கனிம குறைபாடு கூட வரும். இதில் புரதம் தான் அதிகமாக காணப்படுகிறது அதனால் மற்ற சத்து குறைபாடு வரலாம். புரதச்சத்தை கிரகிக்க முடியாத செரிமான கோளாறு ஏற்படலாம். இந்த மீல் மேக்கரில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நம்முடைய சிறுநீரக செயழிலப்பு பாதிப்புக்கு காரணம் ஆகும். சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் உங்களுக்கு தெரியாமல் மீல் மேக்கரால் உருவாகிவருகிறது. தாய்ப்பால் ஊட்டும் பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கரிடம் கேட்காமல் மீல் மேக்கர் உண்பதை தவிர்ப்பது நலம்.

KOKILA

Next Post

கிணற்றுக்கும் - தோட்டத்துக்கும் திருமணம்!... ஆட்சியர் தலைமையில் நடந்த சுவாரஸ்யம்!... சடங்கு சம்பிரதாயங்களுடன் கொண்டாட்டம்!

Sun Mar 19 , 2023
உத்தரப் பிரதேசத்தில் பழமையான கிணறு ஒன்றுக்கும் அதன் அருகில் உள்ள தோட்டத்திற்கும் கிராம மக்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்ட சம்பவம் சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியில் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்று […]
up marriage

You May Like