வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…! காவல்துறை உத்தரவு…!

traffic bike 2025

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கீழ்கண்ட இடங்களில், ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். காலை 08.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை. மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, இராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மாலை 03.00 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் இராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு எது?. 75 வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியம் இதுதான்!.

Wed Sep 17 , 2025
பிரதமர் நரேந்திர மோடியின் உணவுமுறை மற்றும் உடற்தகுதி எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும் கூட, அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு உள்ளது. அது முருங்கை பரோட்டா. இது […]
Modi favorite food

You May Like