பெற்றோர்களே கவனம்..!! குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது இந்த தவறை செய்யாதீங்க..!!

பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கடமையும், மிகப் பெரிய வேலையுமாக இருப்பது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது தான். குழந்தைகள் சாப்பிட ரொம்ப அடம் பிடிப்பார்கள். அவர்களிடம் அதை பார்.. இதை பார் என்று வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டுவதற்குள்ளேயே பெற்றோர்களுக்கு சில மணி நேரங்கள் ஆகிவிடும். தாய்மார்கள் எப்போது நமது குழந்தை ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். இது நியாயமான ஆசை தான். ஆனால், அதே சமயத்தில் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க ஒரு விதத்தில் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். குழந்தைகளின் சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.


ஆரோக்கியமற்ற உணவுகள்..!

குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடு என்று கூறினால் மட்டும் போதாது. குழந்தைகள் பொதுவாக நாம் சொல்வதை கற்றுக் கொள்வதை விட, நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் தான் கற்றுக் கொள்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அதே நேரத்தில் தாங்களும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

அளவான உணவு..!

குழந்தையால் சாப்பிட முடிந்த அளவிற்கு அளவான உணவை மட்டும் கொடுங்கள். தட்டு நிறைய சாப்பாட்டை போட்டு ஊட்ட வேண்டாம். இவ்வாறு செய்தால் குழந்தைக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே சுத்தமாக போய்விடும். குழந்தைகளின் சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு உதாரணமாக திகழ வேண்டும்.

குழந்தைகளை கட்டாயப்படுத்த வேண்டாம்..!

குழந்தைகளுக்கு பிடிக்காத உணவை வைத்துக் கொண்டு சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்த கூடாது. விளையாட்டு காட்டி சாப்பிட வைக்க வேண்டும். ஏதேனும் கதை சொல்லிக் கொண்டே குழந்தையை சாப்பிட வைக்க வேண்டும்.

ரூல்ஸ் வேண்டாம்..!

குழந்தைகளிடம் ரூல்ஸ் போட்டு அவர்களை திணிக்காதீர்கள். சோடா குடிக்க கூடாது, ஸ்நேக்ஸ் சாப்பிட கூடாது என்று ரூல்ஸ் போடாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு சுமையாக அமைந்து விடும். எனவே, குழந்தைகள் எதை எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொண்டால் நல்லது. மாலை 5 மணி அளவில் அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நேக்ஸ் வகைகளை கொடுக்கலாம். வாழைப்பழம், முளைக்கட்டிய தானியங்கள் போன்றவற்றை கொடுங்கள்.

இப்படி செய்ய வேண்டாம்..!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட் , ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை. உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1,000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.

அதிக உணவு அபாயம்..!

பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு மட்டும் போதுமானது என்பது தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது. குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நேக்ஸ் தருவதே சிறந்ததாகும்.

வெளி உணவுகள் வாங்கும் போது..!

வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால், அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல்..!

குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது நாமும், சரியான உணவு பழக்க முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். சரியான முறையில் அமர்ந்து சாப்பிட வேண்டியதும், மொபைல், டிவி போன்றவற்றை பார்த்துக் கொண்டும் சாப்பிடாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

CHELLA

Next Post

தமிழகமே அடுத்த பயங்கரம்...! 21 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம்...!

Sun Feb 5 , 2023
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 […]
Rape 2

You May Like