தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 70 காலியிடங்களையும், உதவி வனப்பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-1, குரூப்-1 ஏ முதல்நிலைத்தேர்வு இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் 2,49,296 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடவுள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
200 மதிப்பெண்களுக்கு விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது. தேவர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு முன்பாகவே தேவதைக்கு செல்ல வேண்டும் அதன் பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசு கூறிய அனைத்து விதிமுறை விட்டாயே பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: அதிர்ச்சி..! நீதிபதி சென்ற கார் விபத்து…! 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…!