8வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் 8வது குழுவின் தலைவர், உறுப்பினர்களை முறையாக நியமித்தல் மற்றும் விரிவான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிடுதல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, […]

இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இனி டிஜிட்டல் கட்டணங்களை ஏற்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ தபால் நிலையங்களின் கணக்குகள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படாததால், டிஜிட்டல் கட்டணங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சிறந்த நிதி […]

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள கோட்லி மாவட்டத்தின் நிகியால் பகுதியில் உள்ள டெட்டோட்டைச் சேர்ந்த முகமது யூசுப்பின் மகன் முகமது அரிப் அகமது ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கம்பீர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் […]