அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பொதுவாக ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. இறந்துவிட்டால், அந்த தொகுதி தேர்தல் ஆணையத்தால் காலியானதாக அறிவிக்கப்படும். 6 மாதங்களுக்குள் […]

ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது. இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற […]

உலகில் பரவி வரும் புதிதாக அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 கோவிட் மாறுபாட்டின் 4 அசாதாரண அறிகுறிகள் என்னென்ன? NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்ற புதிய COVID-19 மாறுபாடு, உலகின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. வழக்கமான சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமல்ல; இந்த முறை, வேறொரு அசாதாரண அறிகுறியும் தோன்றுகிறது. ஒமிக்ரானின் இந்த துணை மாறுபாடு மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினாலும், உலகளாவிய கவனத்தை […]

சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று (ஜூன் 22) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். சக நடிகர்களும், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களோ அவரின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ​​த்ரிஷாவின் அழகான […]