ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பீஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் போது, லகிசரை தொகுதியில் பதற்றம் நிலவியது.. அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்குச் சாவடியில் நடந்த தாக்குதலை “துரதிர்ஷ்டவசமானது” என்று சின்ஹா தெரிவித்தார். […]

ஜோதிடத்தில், குரு அறிவு, செல்வம், கௌரவம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் வலுவான நிலை பெற்றவர்கள் தொழில் முன்னேற்றம், நிதி செழிப்பு மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியைப் பெறுவார்கள். குருவின் ஆசீர்வாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு உள்ளது என்றும் இந்த ராசிக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாக்பாட் போன்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் குருவின் சிறப்பு ஆசிகளைப் பெறும் […]

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]

பிரான்சின் பிரபலமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் தற்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு (Surveillance) அமைப்பின் பாஸ்வேர்டு “Louvre” என்ற ஒரு சாதாரண வார்த்தை மட்டுமே இருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. $102 மில்லியன் (சுமார் ₹850 கோடி) மதிப்புள்ள நகை கொள்ளைக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது. 7 நிமிடங்களில் நடந்த கொள்ளை ABC செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த கொள்ளை லூவ்ரின் […]

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]

காற்று மாசு, வெப்ப அலைகள் மற்றும் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் இந்த உலகில், புதிய மறைமுகப் பாதிப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.. அது ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Fertility Decline) ஆகும். கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய ஆய்வுகள் தொடர்ந்து விந்து கணக்கிலும் தரத்திலும் (sperm count & quality) கடுமையான வீழ்ச்சியை காட்டுகின்றன. இது ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பெரும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. வாழ்க்கை […]

2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் […]

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார். “நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் […]