ஜோதிடத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றி வருகின்றன.. இந்த கிரக பெயர்ச்சியால் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவற்றின் செல்வாக்கு அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அக்டோபரில், குரு அதன் உச்ச ராசியான கடகத்தில் நுழைந்து, சனியுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அவர்கள் தங்கள் வேலைகள் மற்றும் தொழில்களில் லாபம் ஈட்டுவார்கள். அவர்கள் உள்நாட்டிலும் […]

யுனைட்டெட் ஏர்லைன்ஸின் UA108 என்ற பயணிகள் விமானம், அமெரிக்காவின் வாஷிங்டன் டுல்ஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் மியூனிக் நகரம் நோக்கி புறப்பட்டது.. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, Mayday அவசர அழைப்பு விடுத்து விமானம் மீண்டும் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பியது. என்ன நடந்தது? 2025-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், Boeing 787 Dreamliner வகையைச் […]

இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT) டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.7,827 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ், 2005-06ஆம் ஆண்டிலிருந்து 2023-24ஆம் ஆண்டு வரையிலான AGR (Adjusted Gross Revenue) சார்ந்த வருமானங்களில் குறைவாக கட்டணம் செலுத்தியதாக கூறி வழங்கப்பட்டுள்ளது. AGR என்பது டெலிகாம் நிறுவனங்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் அரசு வசூலிக்கும் கட்டணத்தை குறிக்கும். டாடா நிறுவனத்தின் பதில்: இந்த […]

சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. திருநெல்வேலி மாவட்டம் பாப்பகுடி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விசாரணைக்கு சென்றுள்ளனர்.. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.. இந்த மோதல் குறித்து […]

தவெகவின் உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின்‌ நலனை எதிர்நோக்கி, மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, வெற்றித்‌ தலைவர்‌ திரு. விஜய்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத்‌ தமிழக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவோடு நாம்‌ மேற்கொண்டு வருவதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதன்‌ ஒரு பகுதியாக நமது […]

பஹல்காம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரத்தை அமித்ஷா கடுமையாக சாடினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான […]