ஹைதராபாத்தில் இருந்து மொஹாலிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, இந்த கடிதத்தை எழுதிய நபரை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத் மற்றும் மொஹாலி இடையே இயங்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.. ஜூலை 5 ஆம் தேதி, 220 பயணிகள் மற்றும் […]

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து இண்டிகோ இந்தூர்-ராய்ப்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக மீண்டும் இந்தூரில் தரையிறங்கியது.. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து இது நடந்தது. இந்தூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6:50 மணியளவில் திரும்ப வேண்டிய கட்டாயம் […]

வங்கி, அஞ்சல், காப்பீடு மற்றும் கட்டுமானம் போன்ற பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் உட்பட 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பாரத் பந்த் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து சேவைகளிலும் இடையூறுகள் ஏற்படக்கூடும். பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத மற்றும் தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளை” எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.. 10 […]

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை AAIB சமர்ப்பித்துள்ளது.. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த பலர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார். […]

இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… சூரத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… விமானம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக […]

இந்தியாவின் மிகவும் பிரசித்து பெற்ற கோயில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது.. இங்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.. பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகள் கொண்டு வருகிறது.. அந்த வகையில் தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னபிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், திருமலையில் உள்ள முக்கிய அன்னபிரசாத மையத்தில் தினசரி மெனுவில் […]