சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]
ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகை செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. இது அனைத்து ரத்த வகைகளுடனும் பொருந்தும் என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்த செயற்கை ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமான ஹீமோகுளோபின் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. […]
Minister Shekhar Babu has responded to Tamilisai Soundararajan’s criticism that the people will not be fooled even if the Chief Minister writes a new poem.
பாகிஸ்தானின் உள்ள தனது அலுவலகங்களை திடீரென மூடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ம் ஆண்டு, மார்ச் 7-ம் தேதி பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. கால் நூற்றாண்டு காலமாக, இந்த நிறுவனம் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. […]
கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2 பேருக்கு நிபா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த இருவருக்கு நிபா பாதிப்பு உறுதியானது. கூடுதல் ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன. பாலக்காடு […]
பயணத் திட்டமிடலை மேம்படுத்த, இந்திய ரயில்வே ரயில் முன்பதிவு விளக்கப்படம் தயாரிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய ரயில்வே ரயில் முன்பதிவு விளக்கப்படம் தயாரிப்பது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு முன்கூட்டியே டிக்கெட் நிலை குறித்து அதிக தெளிவை வழங்குவதன் மூலம் […]
கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்கில், எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் இக்தா மசூதியை “சர்ச்சைக்குரிய கட்டமைப்பு” என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தகைய அறிவிப்பு இந்த விஷயத்தை முன்கூட்டியே தீர்ப்பளிப்பதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்திற்குத் தலைமை தாங்கிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, இந்த மனு “இந்த கட்டத்தில்” தள்ளுபடி செய்யப்படுவதாக வாய்மொழியாகக் குறிப்பிட்டார். […]
புதிய யுக இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்த FICCI ஏற்பாடு செய்த உயர்மட்ட பாதுகாப்பு நிகழ்ச்சியில், துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். ஆபரேஷன் சிந்தூரின் போது காணப்பட்ட நவீன போர் சவால்களை கருத்தில் கொண்டு இந்தியா தனது வான் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப […]
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (BOB), உள்ளூர் வங்கி அதிகாரிகள் (LBO) ஆட்சேர்ப்புக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2,500 காலியிடங்களை நிரப்புவதே இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும். இதில் தமிழ்நாட்டிலும் மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் […]
தமிழ்நாட்டின் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா “ வரலாற்று சிறப்புமிக்க இந்த செயற்குழுவில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்த முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. ஓரணியில் திரள்வோம் என்று வீடு வீடாக முதலமைச்சர் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் சிவகங்கையில் […]