ரஷ்யா நாடு முழுவதும் வாட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைதள சேவையைத் தடை செய்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலிகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, சட்ட விதிமீறல்கள் நடந்ததாக கூறி, ரஷ்யாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு டெலிகிராம் (Telegram) செயலியையும் தடை செய்திருந்தது. இந்தத் தடைக்கு பதிலளித்த வாட்ஸ்அப், இது 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை […]

ஐரோப்பாவின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஊழல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் ஊழல் அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது என்று குளோபல் டிரான்ஸ்பேரன்சி (Global Transparency) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் ஊழல் மதிப்பெண் (Corruption Score) 2025-ல் 39 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 91-வது இடத்தை பிடித்துள்ளது. 2024-ல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

எடை குறைக்க முயற்சிக்கும் பலர், குறைவாக சாப்பிட்டால், தங்கள் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் பெரும்பாலான மக்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள். ஆனால், எடை குறைப்பதற்கான ஒரே வழி இதுவல்ல. ஏனென்றால், சிலர் ‘நான் எவ்வளவு சாப்பிட்டாலும், நான் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கிறேன்’ என்று புகார் கூறுகிறார்கள். எடை குறைக்க தங்கள் உணவை மாற்றுபவர்கள் குறைவாக சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் அவர்கள் என்ன வகையான உத்திகளைப் பின்பற்ற […]

மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் பிப்ரவரி 12, 2026, அதாவது இன்று நாடு தழுவிய பாரத் பந்த் நடத்துவதால், தமிழ்நாடு முழுவதும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதைப் பொறுத்து தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மாவட்ட வாரியாக மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய 29 தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்த நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிர்ப்புத் […]

பிப்ரவரி 12 அன்று, இந்தியா முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட சேவைகள் பல மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கலாம் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் […]

செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.. இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தின் சோங்க்லாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.. இது நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூடு […]

கொரிய நடிகர் ஜங் யூன் வூ பிப்ரவரி 11 அன்று காலமானார். 40 வயதான அவர் திடீரென இறந்துவிட்டதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், பின்னர் அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவர் பகிர்ந்து கொண்ட ஒரு சமூக ஊடகப் பதிவுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு அவரது மனநிலை, அவரது சமீபத்திய தலைப்புகள் […]