சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட இன்னும் கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.. ஆனால் அதற்கு முன்பு அகவிலைப்படியில் (DA) மற்றொரு அதிகரிப்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஜூலை 2025 முதல் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி என்றால் என்ன? பணவீக்கத்தின் […]

ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, […]

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யுமாறு பெர்னாண்டஸ் கோரியிருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், பணமோசடி தடுப்புச் சட்டம், 20202-ன் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பணமோசடி குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தையும் […]

அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர் என்று அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2 நாட்களாக […]

கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் அச்சத்தை தூண்டி உள்ளன. சமீபத்தில் ஜப்பானின் அகுசேகி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அகுசேகி தீவில் உள்ள ஒரு […]

‘AI இன் காட்பாதர்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டிஷ்-கனடிய கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் ஒரு சூப்பர் AI அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (AGI), இந்த கிரகத்தில் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும், இது உலகளாவிய அணுசக்தி போரை விடவும் அதிக ஆபத்தானதாக மாறலாம் என்று அவர் நம்புகிறார். குறுகிய […]