போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகிறது. போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7-ம் தேதி வரை […]

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறங்கியது. ஜூலை 2 ஆம் தேதி, டெல்லியில் இருந்து வாஷிங்டன், டிசிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால், ஆஸ்திரியாவின் வியன்னாவில் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அட்டவணைப்படி இயங்கி வந்த AI103 விமானம், வியன்னாவில் திட்டமிட்ட எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்தை மேற்கொண்டது. […]

முன்கூட்டியே கடன் செலுத்தும் கட்டணங்கள் குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. கார் லோன், ஹோம் லோன், பெர்சனல் லோன் என ஏதாவது ஒரு கடனை வாங்கி மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கடன் பெற்ற நபர்கள் சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே கடனை செலுத்துகின்றனர். ஆனால் இப்படி முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தும் போது பெரும்பாலான வங்கிகள் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.. இந்த […]

மாலியில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனை ஒரு ‘வன்முறைச் செயல்’ என்று கூறியது. மேலும், இந்தியர்களை மீட்பதையும், பாதுகாப்பாக நாடு திரும்புவதையும் மாலி உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி, ஆயுதமேந்திய தாக்குதல் குழுவினர் தொழிற்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியபோது, ​​கேயஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த […]