தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் […]
முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியத்தை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற […]
சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் சொந்தமாக வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 29.07.2025 முதல் 31.07.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நிறுவனம் […]
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, […]
பொது வருங்கால வைப்பு நிதி – 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறு சேமிப்பு மற்றும் வரி சேமிப்புத் திட்டமாகும். இது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தைப் பெற உதவுகிறது. PPF கணக்கைத் திறப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் […]
வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் […]
கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் […]
2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி […]
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் […]
விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. […]

