குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குரூப் 2 தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு […]

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் […]

ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டிட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 […]

TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி […]

விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு […]

தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, டெலிவரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கோவை […]

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு மொத்தம் 260 இடங்கள் வரை உள்ளது. சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக் கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. […]

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட […]