திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் 04.07.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவை காண பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
மங்களகரமான தினங்களான ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் […]
பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை வாகன இயக்கத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு முழுவதும் முதல் முறையாக மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் குமாரசாமி வழிகாட்டுதலின் கீழ் கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாடு ழுழுவதும் சுத்தமான, நிலையான சரக்கு […]
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் […]
நடப்பு காரிப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும். நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 காரிப் பருவத்தில் வெண்டை, வெங்காயம் தக்காளி ஆகிய பயிர்களுக்கு 1.9.2025 வரை விவசாயிகள் […]
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில […]
ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் […]
சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 2026 தேர்தலில் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. […]
மனை பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, திருமண மண்டபம் சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். மாறாக வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது இன்று நகர் ஊரமைப்பு இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரமைப்பு இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விரிவான அபிவிருத்தி திட்டங்கள் (Detailed Development Plan) தயாரிக்கப்படும்போது ஒப்புதலளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலுள்ள பொது ஒதுக்கீடுகள், விரிவான அபிவிருத்தி […]
அரசுப் பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் […]

