மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]
காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கான உரங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜெ.பி பிரகாஷ் நட்டா கூறியதாவது ; காரீப் பருவத்தில் உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யூரியா தடையின்றி விநியோகிப்பதற்கு வகை செய்ய வேண்டும். இதனையடுத்து தெலங்கானா மாநில விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் […]
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் […]
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு […]
3 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சென்னை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025-2026 கல்வியாண்டுக்கான 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.05.2025 முதல் தொடங்கியது. விருப்பமுள்ள மாணவர்கள் B.A LLB.(Hons), B.B LLB.(HONS), B.COM .LLB .(HONS), மற்றும் BCA,LLB (HONS) படிப்புகளில் சேர்வதற்காக “School of Excellence in Law”, சென்னை மற்றும் […]
ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் […]
பொதுமக்கள் வழங்கும் மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறைவாரியாக தமிழ்நாடு துணை […]
ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் […]
அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1996 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், […]
வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

