கானா அரசு நாட்டின் உயரிய விருதான’தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக நேற்று கானா சென்றடைந்தார். விமான நிலையத்தில் கானா அதிபர் மேதகு ஜான் டிராமணி மஹாமா, பிரதமருக்கு சிறப்பு மரியாதையுடன், பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தார். இந்த மரியாதை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் […]
செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை […]
10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டாசயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm. ac.in/schoolconnect என்ற இணையதளம் மூலம் ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும். பள்ளி இணைப்புத் திட்டம் என்பது ஐஐடி மெட்ராஸில் உள்ள அவுட்ரீச் […]
வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது . பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகிய பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்து […]
திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில், நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து என டாக்டர் முர்ஹேகர் தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் […]
மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் […]
மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் […]
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. […]
மத்திய பணியாளர் தேர்வாணையம் பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணி மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்முகத் திறன் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர் மற்றும் ஹவில்தார் பணிக்கான தேர்வு 2025 குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்களில் பன்முகத்திறன் பணியாளராக […]

