கதர் தொழில்துறையைச் சேர்ந்த நபர்களுக்கு நாளை முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும். கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Advisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]

தேசிய சுகாதார ஆணையம், தனது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும், விரைவாகவும் வழங்குவதற்கு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கு பெறும் மருத்துவமனைகளில் ஸ்கேன் மற்றும் பகிர்வு செயல்பாடு மூலம் புற நோயாளிகள் பிரிவில் உடனடி பதிவு சேவைகள் நோயாளிகளுக்கு, வழங்கப்படுகிறது. இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே 10 லட்சம் நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர். கடந்த மாதம் (பிப்ரவரி 23, […]

டெல்லியில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக நேற்று 300 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 13.89 சதவீதமாக உயர்ந்தது, நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரெழுத்துவதாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்‌ மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பானவைகளை பெற்றிடவும்‌ பயன்படுகிறது. இந்நிலையில்‌ மத்திய மின்னணு தகவல்‌ தொழில்‌ நுட்ப அமைச்சகம்‌ ஆதார்‌ விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்துள்ளது. அதன்‌ பேரில்‌ ஆதார்‌ அடையாள அட்டைதாரர்கள்‌ 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்‌. கடந்த 8 முதல்‌ 10 ஆண்டுகளுக்கு முன்னர்‌ […]

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பப்பட் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பப்பட் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கிரிஷ் பப்பட், பணிவான மற்றும் கடினமாக உழைக்கும் தலைவராக திகழ்ந்து சமூகத்திற்கு தொடர்ந்து சேவைகளை செய்தார். மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்காக அவர், பெரிய அளவில் […]

இந்தியாவில் 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது. உலகில் ஹஜ் புனித […]

நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் […]

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தால் ரூ.5,000 பரிசாக வழங்கப்படும். தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் பொழுது பேசிய அமைச்சர்; சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் படி பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை […]