2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின் போது திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கல்வியாளர் அணியின் தலைவராக புகழ்பெற்ற பேச்சாளர் புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி மதுரையில் […]

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் […]

வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று உடம்பில் துணி இல்லாமல் தூங்கும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]

வரும் ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்; பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறந்த நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் […]

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். ஒருவரின் பான் கார்டு (PAN Card) ஆக்டிவ் ஆக இல்லாத நிலையில், அவர் அதை […]

திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த […]