தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது […]
பால் கலப்படத்தை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம். பாலின் தூய்மையைக் […]
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமியின் முதல் பாஷா சம்மான் விருது பெற்ற பிரபல கவிஞர் சந்திர காந்தா முரசிங் (66), மாரடைப்பால் அகர்தலாவில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெங்காலி மற்றும் திரிபுராவின் பழங்குடியினர் கொக்னோரோக் ஆகிய இரு மொழிகளிலும் கவிதைகள், உரைநடை மற்றும் நாடகங்களை எழுதிய முரசிங்குக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். கோக்போரோக்கின் இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், சாகித்ய […]
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் crpf.gov.in/recruitment இல் இந்த பதவிகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். CRPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2023 (தொழில்நுட்ப & டிரேட்ஸ்மேன்) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை […]
2024 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் தற்போது 18,053 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான தேவை 35 ஆயிரத்து 615 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. 18 மணி நேரம் விவசாயிகளுக்கு […]
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் […]
நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க குழு அமைத்த மத்திய அரசு. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க ஏதுவாக மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் துவரம்பருப்பு இறக்குமதியாளர்கள், ஆலை நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் உள்ள கையிருப்பை குறிப்பிட்டக் கால இடைவெளியில் கண்காணிக்கும் பணியை […]
நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, […]
HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Associate Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]