தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் […]
வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் […]
தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் DigiClaim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும். இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு […]
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்தவ பள்ளி, முதல்வரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. குழு படுக்கைகள், மதுபானம் மற்றும் ஆணுறைகள் மற்றும் முட்டை தட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தது. “காஸ் சிலிண்டர் மற்றும் மது பாட்டில்கள் உட்பட பிற ஆட்சேபனைக்குரிய […]
சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில; சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து […]
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட ராகுல் காந்திக்கு எதிரான மனுவுக்கு பதிலளிக்குமாறு என்சிபிசிஆருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி டெல்லியில் 9 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்பி ராகுல் காந்தி உயிரிழந்த சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் புகைப்படத்தை […]
10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெறவுள்ள ஏப்ரல் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த […]
புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ரூபாய் 7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருவாய் பெரும் நபர்களுக்கு சாதகமாக மத்திய அரசின் நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 64 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 மக்களவையில் எந்த விவாதமும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக உள்ள இந்த புதிய வருமான விதிப்பு நடைமுறையின் கீழ் 7 லட்சம் வரை […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதனடிப்படையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இந்தியா கடந்த 2022 அக்டோபர் 23 அன்று ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதேபோல் தற்போது ஒன் வெப் நிறுவனத்தின் மீதமுள்ள […]
பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைமையங்கள் 2023 மார்ச் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறைநாட்களிலும் செயல்படும். பிஎஸ் என் எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பணம் செலுத்தும் சேவை மையங்கள் 2023 மார்ச் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விடுமுறை நாட்களிலும் வழக்கமான அலுவல் நேரங்களில் முழுவதும் செயல்படும். வாடிக்கையாளர்கள் கட்டணங்கள் செலுத்துவதற்கும் இதர பரிவர்தனைகளுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.