இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு […]

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]

அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை, ஆனால் பாஜக இருப்பதால் அது முடியாது. பாமக, பாஜக இடம்பெறும் அணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்களுடன் நட்பின் அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தது அவ்வளவுதான். அண்மையில் ஒரு நிகழ்வில் நாங்கள் பங்கேற்க கூடிய வாய்ப்பு அமைந்தது. விஐடி உரிமையாளர் வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். […]

நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் […]

பிரதம மந்திரியின்‌ வேலை வாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில்‌ தொடங்க மானியம் வழங்கப்படுகிறது. காதி மற்றும்‌ கிராம தொழில்‌ வாரியம்‌, மாநில காதி மற்றும்‌ கிராமத்‌ தொழில்கள்‌ ஆணையம்‌ மற்றும்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம்‌ வரையிலான திட்டங்களும்‌, சேவைத்‌தொழில்களுக்கு, ரூ.20 லட்சம்‌ வரையிலான […]

சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி […]

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் […]

ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]

வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்களை ஒருங்கிணைக்க ஒரு எளிமைப்படுத்தப்பட்ட முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒளிவெப்ப சிகிச்சை (PTT) உடன் உதவும் பாலிஎதிலீன் கிளைகோல் (PEG) உடன் பகுதியளவு மூடப்பட்ட நானோ-கப் உருவ அமைப்பைக் கொண்ட தனித்துவமான ஷெல் அமைப்பைக் கொண்ட நானோ துகள்களுக்கான தொகுப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் […]