SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]

திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]

சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள […]

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]

சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]

வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க இருந்த, எஸ்.ஐ எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 909 ஆண்கள்; 390 பெண்கள் என, 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஏப்ரலில் வெளியிட்டது. இதற்காக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். காவல் துறையில், இரண்டு மற்றும் முதல் நிலை காவலர்களாக, தலைமைக் காவலர்களாக பணிபுரிவோரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் […]