நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை. வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் […]
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், […]
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, இன்று முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை […]
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திறனாய்வு தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வித்துறை, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளின் பள்ளிக்கல்வித் […]
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், திமுக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகரமயமாகி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி […]
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இத்துடன், இந்த ஆண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவு செய்கிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான […]
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி […]
மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், […]
உயர் மதிப்பெண் இருந்தால் மட்டுமே 11-ம் வகுப்பில் சேர முடியும் என்பது சமூக நீதிக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயில சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையின் […]
தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே ஒசூரில் ரூ.500 கோடியில் ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி தொடங்கி 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து அதன் திறப்பு […]

