தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் […]

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் […]

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 1990 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் /அட்டவணைகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 8-இன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் அறிவிக்கிறது. தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் […]

வாடிக்கையாளர் சேவைகளில் வட்டார மொழிகளை சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையில் வட்டார மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள் (PSBs) இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வங்கிகளும் கணக்கு திறக்கும் படிவங்கள், பணம் செலுத்தும் சீட்டுகள், பாஸ் புத்தகங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களையும் […]

கொச்சியில் இருந்து நேற்று சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த […]

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு […]

நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 […]

தற்போது வரை, 28 மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேசிய மின்னணு -விதான் விண்ணப்பத்தை (NeVA) செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவற்றில் 20, ஏற்கனவே என்இவிஏ தளத்தில் இணைந்து முழுமையாக டிஜிட்டல்மயமாக மாறியுள்ளன.நாட்டின் 37 மாநில / யூனியன் பிரதேச சட்டமன்றங்களையும் டிஜிட்டல்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் என்இவிஏ செயல்படுத்தப்படுகிறது. “ஒரே நாடு, ஒரே பயன்பாடு” என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், அனைத்து […]

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 8.34 கோடி பேர் சேர்ந்துள்ளனர்; இவர்களில் 48% பேர் பெண்கள். 09.05.2015 அன்று தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டம், அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள், சலுகை பெற்றவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு உலகளாவிய சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் இதற்குத் தகுதி பெறுகிறார்கள். […]