ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]
தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை நேற்று முதல் அமலுக்கு […]
திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் […]
மீனவ இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான பதவிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. வருடத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் தேர்வர்கள் இத்தேர்வை எழுதி வருகிறார்கள். இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு நடத்தப்படும் கடுமையான தேர்வாக இத்தேர்வு உள்ளது. […]
20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]
தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாகநீடிக்கிறது. தெற்கு அந்தமான்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் […]
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும்.வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, […]
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு […]
அடுத்த 5 ஆண்டுகளில் 1,500 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலீடுகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், சாலைக் கட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களை வலுப்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் குறித்த முன்மொழிவின் ஒரு பகுதியாக ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் மேனஜர்ஸ் என்ற தனியார் […]

