மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து இணக்க நடைமுறைகளும், முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான சுய தணிக்கை […]
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும்.தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் […]
அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி […]
தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் […]
தருமபுரி மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச […]
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் […]
வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக அமல்படுத்துமாறு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளின் கீழ், செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் 1600 என்ற வரிசை எண்ணை படிப்படியாக […]
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு. 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் […]

