கனமழை எச்சரிக்கையின் காரணமாக இரண்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று […]
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]
இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது. இந்தத் தேர்வில் […]
நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.சொந்த ஊரில் வசித்து வந்த நடிகர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை […]
பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும். ரயில் இஞ்சின்களில் பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள் பொருத்தப்படுவது, அதிக […]
பொங்கலுக்கு, பரிசாக இலவச வேஷ்டி சேலையுடன் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ஆம் ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,500 ரூபாய் நிதி உதவி உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை மட்டுமே வழங்கியது […]
இந்த மாதம் நாடு முழுவதும் சிமெண்ட் 10 முதல் 15 ரூபாய் வரை மூட்டை ஒன்றிற்கு விலையை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் சிமெண்டின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஒரு மூட்டைக்கு ரூ.16 வீதம் உயர்ந்துள்ளதாக எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிக்கையின்படி, நவம்பரில் ஒரு பைக்கு 6 முதல் 7 ரூபாய் வரை விலை […]
சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, 2022க்கான முடிவை தேர்வாணையம் அறிவித்துள்ளது. UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு, 2022க்கான முடிவை தேர்வாணையம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் சிவில் சர்வீசஸ் முதன்மை 2022 முடிவை upsc.gov இல் உள்ள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். CSM-2022க்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல்கள் குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடத்தத் தொடங்கும். விண்ணப்பதாரர்களின் ஆளுமைத் தேர்வுகளின் மின்-அழைப்புக் கடிதங்கள் […]
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாஹி மஸ்ஜித் இத்காவிற்குள் ஹனுமான் சாலிசாவை ஓத வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபாவின் அழைப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் மதுராவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். “புதிய பாரம்பரியம் அல்லது சடங்குகள் எதுவும்” அனுமதிக்கப்படாது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோவில் மற்றும் கோவில் நகரத்தில் உள்ள ஷாஹி மஸ்ஜித் […]
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை Mandous புயலாக வலுவடைய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு […]