மக்களே…! பொங்கலுக்கு இலவச வேஷ்டி சேலையுடன் 1000 ரூபாய்…! அரசு திட்டம்

பொங்கலுக்கு, பரிசாக இலவச வேஷ்டி சேலையுடன் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ஆம் ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,500 ரூபாய் நிதி உதவி உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை மட்டுமே வழங்கியது தமிழக அரசு.

நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருந்ததாக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். அதேபோல பெரும்பாலான மக்களுக்கு 21 பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறை கேடுகள் நடைபெற்று இருப்பதாக பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இது திமுக அரசு மீது மிகப்பெரிய கருப்பு புள்ளியாக மாறியது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் பொங்கலுக்கு, பரிசாக இலவச வேஷ்டி சேலையுடன் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த பணம் நேரடியாக வங்கி கணக்கில் போடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இன்று அல்லது நாளை வெளியாகலாம்.

Vignesh

Next Post

சூப்பரோ சூப்பர்..!! இனி டென்ஷன் வேண்டாம்..!! ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு..!!

Wed Dec 7 , 2022
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்சாரத்துறை மும்முரமாக செய்து வருகிறது. இதில், ஆன்லைனில் ஏற்கனவே ஒரு லிங்க் வெளியிடப்பட்டு அதில் பயனர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர். அடுத்ததாக, மின்சாரத்துறை 2811 சார்பு அலுவலகங்களில் காலை 10.30 மாலை 5.30 மணி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து சனிக்கிழமைகள் உட்பட இணைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கொடுக்கப்பட்ட மின் இணைப்பு இணையதளங்கள் வாயிலாக மின் நுகர்வோர்கள் தங்களது […]

You May Like