இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: […]
கருவில் உள்ள சிசு பாலினம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியராக இருந்தால், விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் […]
வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நில அளவை துறை உதவி வரைவாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருப்புவனம் […]
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தெற்கு சத்தீஸ்கருக்கு கடந்து செல்லக்கூடும். தென்னிந்திய […]
குரூப்-2 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 23-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் […]
டெட் தேர்வெழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் பல லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் […]
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற, சிறை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில்; கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீததனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடவே, கடந்த 1980-ல் வன்னியர் சங்கத்தை ராமதாஸ் தொடங்கினார். […]
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவை சிங்காநல்லூர் தொகுதியில் பேசிய அவர்; தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் […]
100 நாள் வேலை திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது 150 நாள்கள், வேலை தரப்போவது 20 நாள்கள் தான் தரப்படுகிறது. திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் ஃ; தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை […]
போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில்தான் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதா? திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி […]