ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022-க்கான அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சட்ட ரீதியிலான, சட்டபூர்வ ரீதியிலான அமைப்புகள், தீர்ப்பாயங்களில் குரூப்-பி மற்றும் குரூப் –சி காலிபணியிடங்களை நிரப்புவதற்காக வெளிப்படையான வகையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. பணி விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், […]

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.’ இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை’ வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது. ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உயர்‌ கல்வி பயில கல்விக்கடன்‌ பெறுவதற்கு மாணாக்கர்கள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன்‌ பெறலாம்‌. இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள்‌ படிப்பதற்கு கல்விக்‌ கட்டணம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்ற நோக்கில்‌ உயர்‌ கல்வியைத்‌ தொடர, கல்விக்‌ கடன்‌ முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வங்கிகள்‌ மூலமாக கல்விக்‌ கடனுக்கு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகிறது. அந்த […]

மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான […]

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரம்பூரில் பெரியார் நகர் 1, […]

வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் இன்று அறிமுகம் செய்ய உள்ளார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு […]

இது குறித்து முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெருமாள்சாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கல்வித்துறை அறிவித்தது. இந்தப் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இதுவரை 2,000ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் […]

அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதல்முறையாக 6-ம் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,443 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, ​​இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.இரு சக்கர […]