புதிய சட்டங்களை உருவாக்க முடிவு…! அக்டோபர் 20-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…!

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.’

இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை’ வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது.

ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் விளக்கக் குறிப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.வரைவு மசோதா மற்றும் விளக்கக் குறிப்பை https://dot.gov.in/relatedlinks/indian-telecommunication-bill-2022. மசோதா என்ற இணையதளத்தில் காணலாம். கருத்துகளை naveen[dot]kumar71[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம். கருத்துகளை 2022 அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் ‌.

Vignesh

Next Post

“ இனியும் இப்படி இருந்தால்..” எச்சரித்த அமித்ஷா.. ஷாக்கில் இபிஎஸ்.. அடுத்து என்ன செய்ய போகிறார்..?

Fri Sep 23 , 2022
இனியும் பிரிந்து செயல்பட்டால் கட்சி வீழ்ச்சியடையும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் பொதுக்குழுவில் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. பழனிசாமியை எதிர்த்து, […]

You May Like