பள்ளி மாணவர்கள் எழுதிய முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு […]
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் […]
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிமுறைகள் கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள […]
சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2 நாட்களாக மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்த நிலையில், நேற்று அதைவிட கூடுதலான இடங்களில் மழை பெய்தது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று கூறி உள்ளது. இந்த […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டில் சேலம், சேலம் (மகளிர்) மேட்டூர் அணை மற்றும் கருமந்துறை (பழங்குடியினர்) ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களான சேலம் பாலிடெக்னிக் ஐடிஐ, சேலம் மற்றும் வேல்ஸ் ஐடிஐ, மேட்டூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு […]
தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார். பெரம்பலூரில் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்; கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளது போல, நாங்களும் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். […]
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை […]
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000 கல்வி உதவித்தொகையுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-26ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. […]